மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் டாமினிக் ராப் கோவிட் நோய்க்கு எதிரான சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவுக்கு உதவத்தயார் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்ததையடுத்து இந்த உரையாடல் நடைபெற்றது. இந்தியாவுக்கு 60 வகையான மருத்துவ உதவிகளை அனுப்பி வைப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. காமன்வெல்த் நாடுகளின் உதவியுடன் இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்களை அனுப்பவும் பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.
இதே போல் பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் , பரிசோதனைக் கருவிகள், தடுப்பூசிக்கான ஆதாரப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்படுகின்றன.