கொரோனா தொற்றால் மிதமான பாதிப்பு ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக 4 ஆயிரம் ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றி தயராக இருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு படுக்கை வசதி கிடைக்காத சூழல் உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு சுமார் 4 ஆயிரம் ரயில் பெட்டிகளில் 64 ஆயிரம் படுக்கைகளை தயார் செய்திருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 169 ரயில் பெட்டிகள் பல்வேறு மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.