சென்னையில் தங்கியிருந்த விடுதி அறைக்கு வாடகை பாக்கி தராமல், கேட்டால் மிரட்டுவதாக நடிகை விஜயலட்சுமி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தியாகநகரிலுள்ள விடுதியில் சகோதரியுடன் தங்கியிருந்த நடிகை விஜயலட்சுமி, 2 மாதமாக அறை வாடகை தராமல் இருந்துள்ளார்.
சகோதரியின் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் சென்றுவிட்டு அவர் திரும்பி வந்த போது விடுதியின் உரிமையாளர் உத்தரவுபடி, அவரது உடைமைகளை வேறு ஒரு அறைக்கு மாற்றி வைத்திருந்தனர்.
இதனை கண்ட நடிகை விஜயலட்சுமி, ஆவேசமாக ஆபாசமாக பேசி விடுதி ஊழியர் சிவாவை செருப்பால் அடித்ததாகவும், வாடகை பாக்கி ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்டபோது, தர முடியாது" என்று கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.