நாட்டில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஹஜ் இல்லங்களை கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக சிகிச்சை மையங்களாக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
குஜராத், கர்நாடகம், கேரளம், டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீர், தமிழ்நாடு, ராஜஸ்தான், பீகார், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள ஹஜ் இல்லங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.