இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று அஸ்ஸாம் எல்லையில் உள்ள தனது ஆக்ஸிஜன் ஆலையைத் திறக்க பூடான் அரசு சம்மதித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பூடான் அரசு தனது எல்லையை மூடியுள்ளது.
இந்நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக அஸ்ஸாம் மற்றும் பூடான் எல்லைப் பகுதியான சம்த்ரூப் ஜோங்கர் என்ற இடத்தில் உள்ள தனியார் ஆக்ஸிஜன் ஆலையைத் திறக்க இந்தியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்டுள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக் குறிப்பிட்ட ஆலையைத் திறந்து ஆக்ஸிஜன் உற்பத்திக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆலையில் தினசரி 50 டன் அளவிற்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்பதால் உற்பத்தி தொடங்கியதும் அதனை பெற்றுக்கொள்வதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.