பஞ்சாப்பில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, பகுதி நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரையும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக இருப்பதாக, கூடுதல் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசை பஞ்சாப் அரசு கேட்டுள்ளது.