கொரோனா அச்சத்தால் சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் தாராளமாக செல்லலாம் எனவும், ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பீதி காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் மூவரும் நாடு திரும்பியதாக கூறப்பட்டதை அடுத்து பிசிசிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சத்தால் வெளியேற நினைப்பவர்களின் வழியில் பிசிசிஐ குறிக்கிடாது எனவும், அவர்கள் தாராளமாக ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகிக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.