மேற்கு வங்கத்தில் 34 தொகுதிகளுக்கு நடைபெற்ற ஏழாம் கட்டத் தேர்தலில் 75 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் மம்தா பானர்ஜியின் மருமகனுமான அபிசேக் பானர்ஜி கொல்கத்தா பவானிப்பூரில் வாக்களித்தார்.
திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நுஸ்ரத் ஜகான் பெற்றோருடன் வந்து கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினார். சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வாக்களித்தபின் வெளியேவந்த அவர் தங்கள் கட்சி வெற்றிபெறும் என்பதைக் காட்டும் வகையில் விரல்களை உயர்த்திக் காட்டினார். மாலை ஐந்தரைமணி நிலவரப்படி 75 விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பதிவாகியிருந்தன.