இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கேட்டு மனம் உடைந்து போய் உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் இதை தெரிவித்துள்ள அவர், கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகள், ஆக்சிஜன் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவுக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா முன்வந்துள்ளதற்கு தாம் நன்றி தெரிவித்து கொள்வதாகவும் சத்ய நாதெள்ளா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.