மேற்கு வங்கத்தின் 34 சட்டமன்றத்தொகுதிகளுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இத்தேர்தலில் சுமார் 86 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றுள்ளனர். 284 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்தல் தொடர்பான வன்முறை மேற்குவங்கத்தில் தலைவிரித்தாடிய நிலையில் துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏழாம் கட்டம் மற்றும் எட்டாம் கட்டம் வாக்குப்பதிவை ஒரேயடியாக நடத்த வேண்டும் என்ற மமதா பானர்ஜியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.
தலைவர்கள் பிரச்சாரத்துக்கு 500 பேர் மேல் கூட்டம் கூட்டக் கூடாது என்றும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
எட்டாவது கட்டத் தேர்தல் இம்மாதம் 29ம் தேதி நடைபெற்ற பின்னர் மே 2ம் தேதி மேற்குவங்கம், தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களின் வாக்குகள் எண்ணிக்கை தொடங்க உள்ளது.