டெல்லியில் ரெம்டிசிவிர் மருந்தைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்ற மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பயன்படும் ரெம்டிசிவிர் மருந்து, கொரோனா தடுப்பு மருந்துகள் ஆகியவற்றைப் பதுக்கி வைத்துக் கள்ளச்சந்தையில் விற்பதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் ரெம்டிசிவிர் மருந்தை 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மூவரை மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலரின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களின் வாகனத்தில் இருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய், நூறு ஆக்சி மீட்டர்கள், 48 சிறிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.