தேவைக்கு அதிகமாகவே டெல்லிக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அதனை முறையாக பயன்படுத்துவது கெஜ்ரிவால் அரசின் பொறுப்பு என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான போக்குவரத்துத் தடைகள் அகற்றப்பட்டிருப்பதாகவும் ஆக்சிஜன் லாரிகளை செல்ல விடாமல் தடுக்கும் காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக கூறிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மாநில அரசுகளிடம் உபரியாக உள்ள ஆக்சிஜனை தந்து உதவுமாறு கோரி கடிதம் எழுதியிருந்த நிலையில், ஹர்ஷ்வர்தன் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.