இந்தோனேசியாவில் 3 நாட்களாக தேடப்பட்டு வந்த மாயமான மூழ்கிப்போன நீர்மூழ்கி கப்பல் கண்டறிப்பட்டுள்ளது.
பாலி தீவு அருகே கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நீர் மூழ்கியைக் காணவில்லை என்று கடந்த புதன்கிழமை தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. தற்போதைய நிலையில், இந்நீர்மூழ்கிக் கப்பல் கடலில் 2,ஆயிரத்து 788 அடி ஆழத்தில் மூழ்கி உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இது இந்த நீர்மூழ்கி கப்பலின் திறனைக் காட்டிலும் மிக அதிகமான ஆழமாகும்.
அதில் இருந்த 53 மாலுமிகளும் தப்பிப்பிழைப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற கருதப்படுவதால் உடல்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.