கொரோனா இரண்டாவது அலையை சுனாமி என வர்ணித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், ஆக்சிஜன் விநியோகத்திற்கு இடையூறாக யார் இருந்தாலும் தூக்கிலிடப்படுவார்கள் என ஆவேசமாகக் கருத்து தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகளின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருப்பதாகக் கூறி, டெல்லியை சேர்ந்த 3 தனியார் மருத்துவமனைகள் உயர்நீதிமன்றத்தை அணுகின. வழக்கில் ஆஜரான டெல்லி அரசு வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விநியோகம் இல்லை எனில், டெல்லியின் சுகாதார கட்டமைப்பே சிதைந்து விடும் என்று தெரிவித்தார்.
அப்போது ஆக்சிஜன் விநியோகத்திற்கு இடையூறாக இருந்த ஒரேயொரு உதாரணத்தை குறிப்பிடுங்கள், சம்மந்தப்பட்ட நபரை தூக்கில் ஏற்றி விடுகிறோம் என நீதிபதிகள் ஆவேசமாகக் கருத்து தெரிவித்தனர். ((ஆக்சிஜன் விநியோகத்திற்கு இடையூறாக, மத்திய அரசிலோ மாநில அரசிலோ உள்ளூர் நிர்வாகத்திலோ யார் இருந்தாலும் அவர்களை விட்டுவைக்க மாட்டோம் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.)) ((உற்றார், உறவினர்களுக்கு ஏதாவது நேரும்போது மக்கள் எப்படி எதிர்வினையாற்றுவர்கள் என தெரியாது என்பதால்,)) டெல்லியில் உள்ள மருத்துவமனைகளுக்கு வேண்டுகோளின்பேரில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.