ராமஜென்ம பூமி வழக்கில், பாலிவுட் ஹீரோ ஷாருக் கான் வாயிலாக சமரச பேச்சுவார்த்தை நடத்த,ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே விரும்பினார் என தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று ஓய்வு பெற்ற போப்டேவுக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காணொலியில் பிரிவு உபசார விழா நடதினர். அப்போது பேசிய சங்கத்தின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங், தமக்கு ஷாருக்கானை நன்கு தெரியும் என்பதால், அவரிடம் பேசி, சமாதான பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற முடியுமா என நீதிபதி போப்டே கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
அதற்கு ஷாருக் கான் சம்மதம் தெரிவித்த தாக குறிப்பிட்ட விகாஸ் சிங், ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.