கொரோனா 2வது அலை அடுத்த வாரம் உச்சத்தை எட்டும் என்று பிரதமரின் அறிவியல் ஆலோசகர் தகவல் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே கொரோனா அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று அவர் கூறினார்.
மக்கள் முககவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற அவர், பெரும்பாலான இடங்களில் மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதது கவலை தருகிறது என்றார்.
கொரோனா 2-வது அலை இந்த மாத இறுதியில் உச்சம் பெறும் என்றும் அடுத்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.