மேற்கு வங்கத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
500 பேருக்கு மேல் கூடக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேரணிகள் வாகன அணிவகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டு உடனடியாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜியும் இன்று முதல் அனைத்துப் பிரச்சாரக்கூட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். தாம் மீண்டும் ஆட்சியில் அமர்ந்து அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.