மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுக்கு மற்றோர் விலை என தடுப்பூசிக்கு சீரம் இந்தியா விலை நிர்ணத்திருப்பது நியாயமல்ல என பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.
டோஸ் ஒன்றுக்கு மாநில அரசுகளிடம் 400 ரூபாயும், மத்திய அரசிடம் 150 ரூபாயும், தனியார் மருத்துமனைகளிடம் 600 ரூபாயும் சீரம் இந்தியா விலை நிர்ணயித்துள்ளது. இந்த விலை நிர்ணயம் மத்திய அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மத்திய-மாநில அரசுகளுக்கு இரண்டு விதமான விலைகளில் தடுப்பூசியை விற்பது அபத்தமானது என துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தனியாருக்கு அதிக விலைக்கு விற்பதால் வருமானம் அதிகரித்து தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கலாம் என்ற அவர்கள், அதே நேரம் மத்திய-மாநில அரசுகளுக்கு தனித்தனி விலையை நிர்ணயித்திருப்பது கூட்டாட்சி தத்துவத்துற்கு எதிரானது எனவும் கூறியுள்ளனர்.