கொரோனா இரண்டாம் அலை வீரியத்தன்மை அதிகமாக உள்ளதாக கருதப்படும் சூழலில் குழந்தைகளுக்கு அதிகளவில் பாதிப்புகள் ஏற்படுவது பெற்றோரை கவலையடைய செய்துள்ளது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆயினும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்தவிதத் தடுப்பூசியும் இல்லாததால் குழந்தைகள் வீடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அண்மையில் குழந்தைகளுக்கு அதிகளவில் பாதிப்புகள் காணப்படுகின்றன. இதனால் பெற்றோரிடமிருந்து குழந்தைகள் தனிமைப்படுத்தப்படும் நிலையும் உருவாகியுள்ளது.
குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாமல் பெற்றோர் தவிக்கும் நிலையிலும் பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கும் குழந்தைகளிடமிருந்து இதர குழந்தைகளுக்கும் கொரோனா பரவி வருவது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.