மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் அரசின் ஆம்புலன்ஸ் சேவைக்கு நாள்தோறும் ஒன்பதாயிரம் அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் அரசு ஆம்புலன்ஸ் சேவையைப் புனேயில் உள்ள அவசர மருத்துவச் சேவைகள் அமைப்பு நிர்வகித்து வருகிறது. இந்த அமைப்பின் கீழ் மாநிலம் முழுவதும் 937 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. ஆம்புலன்ஸ் சேவைக்கு நாள்தோறும் ஒன்பதாயிரம் முதல் பத்தாயிரம் அழைப்புகள் வரை வருவதாகக் கட்டுப்பாட்டு அறை மேலாளர் தெரிவித்துள்ளார்.
விபத்துக்கள், குழந்தைப் பேறு தொடர்பான அழைப்புகளே முதலில் அதிகம் வந்ததாகவும், இப்போது கொரோனா தொடர்பான அழைப்புகள் அதிகம் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.