இதற்கு முன் இதுபோன்றதொரு நிலையை பார்த்ததே இல்லை என அச்சம் தெரிவித்துள்ள மும்பையைச் சேர்ந்த பெண் மருத்துவர், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொற்று நோய் பிரிவு நிபுணரான மருத்துவர் திருப்தி கிலாடா மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி, ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் உள்ளிட்ட தடுப்பு மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தற்போதைய சூழலில், மருத்துவர்கள் அனைவருமே மன அழுத்தத்தில் இருப்பதாக கூறிய கிலாடா, கண் முன்னே நோயாளிகள் படும் கஷ்டத்தை பார்த்தும் உதவ முடியாத நிலையில் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாகவே உள்ளதால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.