சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதியாகியுள்ள தோனியின் தந்தை பான் சிங் மற்றும் தாய் தேவகி ஆகியோர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பல்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவரது உடல்நிலையும் சீராக உள்ளதாகவும், அவர்களது உடலில் ஆக்ஸிஜன் லெவல் சரியான அளவில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐ.பி.எல். போட்டிகளுக்காக தோனி மும்பையில் முகாமிட்டுள்ளது குறிப்பிடதக்கது.