கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 28 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம் அல்லது கடைகள் கொரோனா இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்னரும் நோய்த்தொற்று ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு 28 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெருந்தொற்று அதிகரிப்பால் எந்த தொழிற்சாலை மூடப்பட்டாலும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.