உத்தரப்பிரதேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பெருந்தொற்று வேகத்தைக் கட்டுப்படுத்த வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை வரை வாராந்திர பொதுமுடக்கம் அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும் பல்வேறு பகுதிகளில் இரவு பொதுமுடக்கத்தை அறிவிப்பது என்றும், கொரோனாவைக் கட்டுப்படுத்த மே ஒன்றாம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவது எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.