கொரோனா தொற்றைப் பொறுத்தவரை அடுத்து வரும் 3 வாரங்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா மற்றும் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலம் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், பொது சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதற்காக மருத்துவமனைகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துதல், கட்டுப்பாட்டுப் பகுதிகளை அதிகரித்தல் போன்றவற்றை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அடுத்து வரும் 3 வாரங்கள் முக்கியமானவை என்பதால் மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் ஹர்ஷவர்தன் கூறினார்.