மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் பெறும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அமேசான் நிறுவனம் ஏற்பாடு செய்த காணொலிக் கருத்தரங்கில் மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது, மின்சார வாகனங்கள் தயாரிப்பை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக குறிப்பிட்டார்.
அடுத்த 6 மாதத்துக்குள் இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரிகள் தயாரிக்கப்படும் என்றும், இது மின்சாரக் கார் தயாரிப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும் என்றும் தெரிவித்தார். ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் குறித்தும் அரசு ஆராய்ந்து வருவதாக நிதின் கட்கரி குறிப்பிட்டார்.