6 மாத கால தடைக்கு பின், பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக, கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் புதிய மாணவர் சேர்க்கை நடத்த தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய பேராசிரியர்கள் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து அந்த தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில்,7 அரசு பி.எட். கல்லூரிகள் உட்பட 21 பி.எட் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனிலேயே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்காக வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் என்றும் செமஸ்டர் தேர்வு செப்டம்பரில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.