தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு வேலை செய்து வந்த வடமாநிலத்தவர்கள் ரயில் மூலம் சொந்த ஊர் செல்ல தொடங்கியுள்ளனர்.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, இரடங்கு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருப்பூர், கோவை, உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்வதற்காக குழந்தைகளுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.
முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, சொந்த ஊர் திரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.