கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த டெல்லி அரசுக்கு 75 பெட்டிகளை வழங்க ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி அரசின் கோரிக்கையை ஏற்று ஆனந்த விஹார் மற்றும் சகுர் பாஸ்தி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் லேசான அறிகுறிகளுடன் உள்ள 800 பேரை பராமரிக்கும் வகையில் 50 பெட்டிகள் சகுர் பாஸ்தியில் வைக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 400 நோயாளிகளுடன் 25 பராமரிப்பாளர்களையும் கொண்ட பெட்டிகள் ஆனந்த விஹார் ரயில்நிலையத்தில் நிறுத்தப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.