கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமது மேற்கு வங்க தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார்.
8 கட்ட தேர்தலில், மேற்கு வங்கத்தில் இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. அங்கு, தேர்தல் பிரசாரத்தை 72 மணி நேரத்திற்கு முன்னதாக முடிக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில், மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் - பேரணிகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக தமது டுவிட்டர்
வலைப்பதிவு மூலம் ராகுல்காந்தி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலையில் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அனைத்து அரசியல் தலைவர்களும் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்றும் ராகுல் கேட்டுக்கொண்டுள்ளார்.