மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் மீண்டும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிரண் ரிஜ்ஜூ தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தான் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்வதாகக் கூறியுள்ள அவர், அண்மையில் தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்வதோடு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.