பிரபல சமூக வலைதளமான ட்விட்டர் சேவையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டதாக பயனர்கள் குற்றஞ்சாட்டியதையடுத்து, விரைவில் பிரச்னை சரி செய்யப்படும் என ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று சுமார் 40 ஆயிரம் பயனர்கள் ட்விட்டர் சேவையில் பிரச்னையை எதிர்கொண்டதாக Downdetector.com என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. சிலரால் ட்வீட் செய்ய முடியாமல் இருக்கலாம் என்றும் பயனர்களின் பிரச்னையை சரி செய்வதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.