கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாசிக்கில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நாளுக்கு நாள் பெருந்தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரவலை துண்டிக்கும் ஒரு பகுதியாக Break the Chain என்ற பரப்புரையை மாநில அரசு முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக நாசிக் நகரில் உள்ள நாணய பாதுகாப்பு அச்சகம் மற்றும் இந்தியா பாதுகாப்பு அச்சகத்தில் ரூபாய் நோட்டுக்களை அச்சிடுவது ஏப்ரல் 30 வரை நிறுத்தப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களிலும் பணியாற்றும் 3 ஆயிரம் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.