ஓய்வு பெற்றுவிட்டதால் தன்னைப் பணி நீக்கம் செய்யும் நோக்கில் அமைத்த விசாரணை ஆணையம் செல்லத் தக்கதல்ல என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
துணைவேந்தராக இருந்தபோது சுரப்பாவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதற்குத் தடை விதிக்கக் கோரி சூரப்பா வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, விசாரணை ஆணையம் அறிக்கை அளித்தாலும் அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என ஏற்கெனவே உள்ள இடைக்கால உத்தவை நீட்டித்த நீதிபதி வழக்கை ஜூன் மாதத்துக்குத் தள்ளிவைத்தார்.