கொரோனா வைரஸ் தொற்று குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் வரும் 17ம் தேதி நடக்க உள்ளது.
காணொலிக் காட்சி மூலம் நடக்கும் இந்தக் கூட்டத்தில் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மேலும் பொருளாதார வீழ்ச்சி, 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் குறித்து இதில் பேசப்பட உள்ளன.
கொரோனா தொற்றின் 2வது அலையில் அதிகமான இளைஞர்கள் பாதிக்கப்படுவதால் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து கூட்டத்தின் வாயிலாக அரசிடம் கேட்கப்படும் என கட்சியின் நிர்வாகிகளுக்கு பொதுச் செயலாளர் வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.