பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்பீல்டு தனது இருசக்கர வாகனங்களின் விலையை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது.
350 சிசி உள்ளிட்ட பல மாடல்களின் விலை இந்த ஏப்ரல் மாதம் முதல் 7 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது, கிளாசிக் 350 சிசியின் விலை 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. மெட்டியோர் 350 சிசி மாடல் 6000 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த ஜனவரியில் தான் ராயல் என்பீல்டு பல மாடல்களின் விலையை 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தியது.கான்டினென்டல், இன்டர்செப்டர் போன்ற 650 சிசி மாடல்களின் விலையும் ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றின் விலை 6000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.