உயிருடன் உள்ள வனவிலங்குகளை இறைச்சிக்காக விற்பனை செய்வது தடுக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் உள்ள வனவிலங்கு கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது. இதனை உலக சுகாதார அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வூகான் சந்தையிலிருந்து மீண்டும் உயிரினங்கள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
எனவே இதன் மூலம் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதால் அதுபோன்று ஏனைய நாடுகளில் செயல்படும் சந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.