ஆந்திர மாநிலம் திருப்பதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீசப்பட்டது.
திருப்பதி நாடாளுமன்றத் தொகுதிக்கு வருகிற 17ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேச கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் பனபகா லட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு பிரச்சாரம் செய்தார்.
கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது மர்ம நபர் ஒருவர் கூட்டத்தில் கல் வீசி விட்டு ஓடி விட்டார். இந்நிலையில் தம் மீது கல் வீசியவர்கள் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளனர் என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் கற்கள் வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியும் சந்திரபாபு நாயுடு உள்பட தெலுங்கு தேச கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.