திருநங்கைகள் நல வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மும்பையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
திருநங்கைகளுக்கு ஏற்கனவே தமிழகம், மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.