இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக, இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சியடைந்தால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவும், பொருளாதார மீட்சி பாதிக்கப்படலாம் என்று கருதியும் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று தள்ளியதால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1707 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 524 புள்ளிகளும் சரிவடைந்தன.
வங்கி, நிதி, வாகன உற்பத்தி, உலோகம், ஊடகம் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் 7 சதவீதம் வரை குறைந்தது.