செயின்ட் வின்சென்ட் பகுதியில் வெடித்த எரிமலையின் செயற்கைக்கோள் படத்தை அமெரிக்க வளிமண்டல ஆராய்ச்சிக் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
கிழக்கு கரீபியன் தீவு பகுதியான செயின்ட் வின்சென்ட் தி கிரேனடைன்சில் (SAINT VINCENT AND THE GRENADINES) எரிமலை வெடித்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு புகை மண்டலமாக காட்சி அளித்தது.
மேலும் எரிமலை துகள்கள் சாலைகளில் மணல் போல் கொட்டியது. இந்த நிலையில் எரிமலை வெடித்தது முதல் புகை மண்டலமாக மாறியது வரையிலான செயற்கைக்கோள் காட்சியை அமெரிக்க வளிமண்டல ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.