ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இரை தேடி வந்த யானைக்குட்டி ஒன்று அங்கிருந்த 15 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.
அதன் பிளிறல் ஓசையைக் கேட்ட ஊர் மக்கள் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினரும் ஊர்மக்களும் யானைக் குட்டியை கிணற்றில் இருந்து கயிறு கட்டி இழுக்க முயன்றனர்.கிணறு குறுகலாக இருந்ததால் அதனைச் சுற்றியுள்ள மண் தோண்டி எடுக்கப்பட்டது.
பின்னர் நீண்ட முயற்சிக்குப் பிறகு யானைக்குட்டி அந்தக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் யானைக்குட்டி மீட்பு