கொரோனா பரவலை தடுக்க சிறந்த வழி எது என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் தெற்கு, கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர்,கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு கொரோனா காலத்துக்கான பொருத்தமான விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவதுதான் சிறந்த வழி ஆகும் என்றார்.
பரிசோதனைகளை அதிகரிக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பு தடம் அறியவும், பாதிப்புக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் முயற்சிகளை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.