பிச்சை எடுப்பது குற்றமில்லையா என்பது குறித்து மத்திய மாநில அரசுகள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை, பஞ்சாப், அரியானா, பீகார் ஆகியவற்றில் கொண்டுவரப்பட்டுள்ள, பிச்சை எடுப்பதை குற்றமாக்கும் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின்படி பீகார் மாநிலம் மட்டுமே பதில் அளித்துள்ளதால் மத்திய அரசும், மராட்டியம், பஞ்சாப், குஜராத், அரியானா மாநில அரசுகளும் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.