புதுச்சேரியில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 10 மணிவரை வழிபட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் அனைத்து சமயப் பெரியோர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் இதனை அறிவித்துள்ள அவர், கொரோனா தொடர்பான அரசின் வழிகாட்டுமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தினார்.