கோயம்பேடு சந்தையில் சில்லறை வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று திங்கட்கிழமை வரை கடைகள் வழக்கம் போல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா 2ஆம் அலை காரணமாக கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்தது. இதனை எதிர்த்து சில்லறை வியாபாரிகள் நேற்று வணிக நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் திங்கள் வரை அனைத்து கடைகளும் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை விற்பனை வழக்கம்போல நடைபெற்று வருகிறது. வரும் திங்களன்று மீண்டும் அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.