ஒடிசாவில் முகக் கவசம் அணியாமல் 2வது முறை பிடிபட்டால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க முகக் கவசம் அணியாதவர்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் அபராதம் விதித்து வருகின்றன. அந்த வகையில் ஒடிசாவில் அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாமல் பொது இடங்களில் சென்றால், முதல் முறை 2 ஆயிரம் ரூபாயும், 2வது முறை 5 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.