கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டை போன்று கோவிலின் உள்ளேயே நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பேசிய அவர், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தனியார் பேருந்து உரிமையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், காய்கறி வணிக வளாக நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.