மும்பை, ராய்ப்பூர், போபால் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கொரோனா பரவலைத் தடுக்க இன்று முதல் ஊரடங்குக் கட்டுப்பாடு தொடங்குகிறது.
மகாராஷ்டிரத்தில் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்றிரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
இன்றியமையாப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இன்றியமையாச் சேவைகளுக்கான வாகனங்கள் தவிர மற்றவை இயங்க அனுமதிக்கப்படாது.
இதேபோல் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ஆம் நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் இன்று மாலை 6 மணி முதல் 60 மணி நேர முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர நாட்டில் இருபதுக்கு மேற்பட்ட நகரங்களில் இரவுநேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.