இரண்டு மீனவர்களை இத்தாலி மாலுமிகள் சுட்டுக் கொன்ற வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
கடந்த, 2012 பிப்ரவரியில் இரண்டு இந்திய மீனவர்கள் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கடல் கொள்ளையர் என, தவறாக நினைத்து, இத்தாலிய கப்பலில் இருந்த மாலுமிகள், 2 மீனவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இரண்டு இந்திய மீனவர்கள் பலியாயினர்.இந்த வழக்கில், இத்தாலி மாலுமிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நிபந்தனை ஜாமினில் இருவரும் தங்கள் நாட்டுக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு, மத்திய அரசு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு விட்டதாக தெரிவித்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க மத்திய அரசுத் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.